6-வது சர்வதேச பயிர் வினையியல் மாநாடு – “மரபணுவில் மற்றும் வினையியல் மாற்றங்களின் மூலம் நீடித்த நிலையான விவசாயம்” என்ற தலைப்பில், நேற்று (டிசம்பர் 15) அன்று கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது.
வேளாண் பல்கலைக் கழகத்தின் பயிர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எம்.கே.கலாராணி வரவேற்றுப் பேசினார். வேளாண்மையில் உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ள பயிர் வினையியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி இணை இயக்குநரும் இந்திய தாவர உடலியல் சங்கத்தின் கௌரவச் செயலாளருமான டாக்டர் சி.விஸ்வநாதன் ISPP-யின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை விளக்கினார்.
மாநாட்டின் கருப்பொருள் மற்றும் இலக்குகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் எம்.ரவீந் திரன் எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் இர.தமிழ் வேந்தன், பயிர் உற்பத்தி உயர்வு, காலநிலைத் தாங்குத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையை மேம்படுத்த மாற்று ஜெனோமிக்ஸ், ஒருங்கிணைந்த பயிர் வினையியல் மற்றும் தரவு சார்ந்த ஆராய்ச்சிகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆய்வுகளிலிருந்து முன்கணிப்பு மற்றும் ஆய்வுகளுக்கு மாற்றம் தேவை என்பதை அவர் சுட்டிக்காட்டி, துறைசார் ஒருங்கிணைந்த ஆராய்ச் சியின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய வேளாண் விஞ்ஞானி நியமன வாரியத் தலைவர் மற்றும் இந்திய பயிர் வினையியல் சங்கத் தின் தலைவர் டாக்டர் சஞ்சய் குமார், தனது தலைமை உரையில், பயிர் வினையியல் மூலக்கூறு உயிரியல், ஜினோமிக்ஸ் மற்றும் மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அறிவியலாக மாறி வருவதை விளக்கினார். நீடித்த உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்குத் தேவை யான தாங்குத்தன்மை கொண்ட பயிர் வகைகள் மற்றும் நிலைத்த தொழில் நுட்பங்களை உருவாக்க உடலியல் அறிவு முக்கிய பங்காற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தொடக்க உரையை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) இயக்குநர், வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி துறையின் (DARE) செயலாளருமான டாக்டர் எம்.எல்.ஜாட் வழங்கினார். காலநிலை மாற்றம், நீர், மற்றும் மண் தொடர்பான உலகளாவிய சவால்களை அவர் எடுத்துரைத்தார்.
2047 ஆம் ஆண்டுக்குள் உணவு உற்பத்தி, வள பயன்பாட்டு திறன் மற்றும் தரத்தை இரட்டிப்பாக்க ஜெனோமிக்ஸ், தாவர அழுத்த மேலாண்மை, கார்பன் பிடிப்பு, நீர் பயன்பாட்டு திறன் மற்றும் புதுமை சார்ந்த ஆராய்ச்சிகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ICPP- 2025 நினைவு நூல் வெளியீடும், மிஷிறிறி விருது வழங்கும் விழாவும் இடம்பெற்றன.
ICPP-2025 ஏற்பாட்டு செயலாளரும், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவருமான டாக்டர் ஏ.செந்தில் நன்றி கூறினார்.



