fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான்

மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான்

ஈரோடு வி இ டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுதா மருத்துவமனை மற்றும் சிற்றுளி அறக்கட்டளை இணைந்து “மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான் – 2025” கல்லூரியில் நடந்தது. இதனை கலெக் டர் எஸ்.கந்தசாமி, சுதா மருத்துமனையின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் கு.சுதாகர் தொடங்கி வைத்தனர்.

கல்லூரி செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், நிர்வாகி கள் ச.பாலசுப்பிரமணியன், எம்.யுவராஜா, முதல்வர் வெ.ப. நல்லசாமி, புலமுதன் மையர் முனைவர் சி.லோகேஷ் குமார் வாழ்த் துரை வழங்கினர். 60க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உட்பட 900 பேர் பங்கேற்றனர். இறுதியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img