கடந்த சில மாதங்களாகவே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 16வது முறையாக மீண்டும் இமெயில் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையி னருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீ சார் மோப்ப நாய் உதவியுடன் இங்கு செயல்பட்டு வரும் ஒவ்வொரு துறை அலுவலகங்கள், கூட்டரங்குகள், உணவு அருந்தும் இடம், உள்ளிட்ட அனைத்து இடங் களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்களிடம் ஏதேனும் வித்தியாசமான பொருள் காணப்பட்டதா என்றும் கேட்டறிந்து சோதனை நடத்தினர்.



