fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 700 ஓவியங்கள் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி

கோவையில் 700 ஓவியங்கள் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி

கோவையில் 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி அளித்து வருவதுடன், தான், மட்டுமின்றி தனது மாணவர்கள் வரைந்த ஓவியங்களையும் பொது மக்கள் பார்வைக்காக காட்சிபடுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒவிய ஆசிரியர்.
கோவையை சேர்ந்தவர் அஜிதா ஜவேரி. ஓவியரான இவர், கடந்த 20 ஆண்டு களாக ஓவிய பயிற்சி மையத் தையும் நடத்தி வருகின்றார். ஆர்டிஸ்ட்டு ஆர்ட் க்ளாஸ் எனும் தலைப்பில் இதனை நடத்தி வரும் இவர், தான் வடிவமைக்கும் புதிய புதிய கை வண்ணங்களை ஆண்டு தோறும் ஒரு ஓவிய கண்காட்சியாக நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கண்காட் சியை கடந்த 13ம் தேதி மற்றும் 14ம் தேதி என இரு நாட்கள், கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், நடத்தி உள்ளார்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஓவிய கண்காட்சியில் இவர் வரைந்த ஓவியங்கள் மட்டுமில்லாமல் தனது மாணவர்களின் படைப்பு களையம் கண்காட்சியில் இடம் பெற செய்து, சுமார் 700க்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிபடுத்தி உள்ளார்.

ஓவிய ரசிகர்கள் இவரது ஓவியங்களை கண்டு ரசிப்பதுடன் வாழ்த்துக்க ளும் கூறி வரும் நிலையில், இக்கண்காட்சி குறித்து ஓவியர் அஜிதா ஜவேரி செய்தியாளர்களிடம் கூறு கையில், தான் கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சிகளை வழங்கி வருகின்றதாகவும், தான் வரையும் ஓவியங்களை பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என அதனை கண்காட் சியாகவும் நடத்தி வருவ தாக கூறினார்.

தனது மாணவ மாணவியர்கள், அதிக அளவில் கலர் பென்சில், ஆயில் பெயிண்டிங், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். இதில் 4 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் ஆர்வமுடன் ஓவிய கலைகளை நன்கு கற்று வருகின்றதாகவும் கூறினார். தற்போது தான் வரைந்த ஓவியங்கள் மட்டுமின்றி தனது மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் என 700க்கும் மேற்பட்ட ஓவியங்களை இக்கண்காட்சியில் காட்சிபடுத்தி உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img