தென்னை மரங்களை வேரோடு அழிக்கும் கேரளா வேர் வாடல் நோய் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராகவும், தேங்காய் மற்றும் தென்னையின் பல்வேறு உப பொருட்களின் வளர்ச்சிக்காவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி கேள்வி யெழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுவையிலும், அளவிலும் பலதரப்பு மக்களால் விரும்பப்படும் பொள்ளாச்சி தேங்காய்க்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது.
பல விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்னை விவசாயத்தில் சமீப காலங்களில் வேர்கள் அழுகும் வேர் வாடல் நோயும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ நோயும் பரவி சுமார் 10 லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு சுற்றுப்புற காரணிகளால் பொள்ளாச்சி பகுதியில் தேங்காய் உற்பத்தித்திறன் 2024 ஆம் ஆண்டு முதல் ஒரு மரத்திற்கு 60-70 என்ற அளவி லிருந்து 40க்குக் கீழ் குறைந்துள்ளது. இதனால் பாதிக்கப் பட்ட விவசாயிகள் இப்பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வந்தனர்.
இதனை கவனத் தில் கொண்ட பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சரிடம், பாதிப்படைந்துள்ள விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் ஒன்றிய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கும் கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தென்னை மரங் களில் பூச்சி மேலாண்மை, வேர் வாடல் நோயால் அழிந்து போன 1 லட்சம் மரங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், கடுமையாக பாதிக்கப்பட்ட 3.5 லட்சம் மரங்களை சரி செய்வதற்கும் அறிவி யல் ரீதியான நடைமுறைகள் மேற்கொள்வதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



