ஈரோடு திண்டல் வேளாளர் கல்வியல் கல்லூரியில் 17வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சாம்பியா, லுசாகா DMI- யூ.ஜி.ன் பல்கலைக்கழகத்தின் சார்பு துணைவேந்தர் பேராசிரியர் நா.பாலசுப்பிரமணியன் பங்கேற்று 250 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.ஜெயக்குமார், செயலர் எஸ்.டி.சந்திரசேகர், நிர்வாகிகள் சின்னசாமி, குலசேகரன், ச.பாலசுப்பிரமணியன், திரு.மு.யுவராஜா, முதல்வர் த.மல்லிகா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.



