செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலு வலர் மா.கணேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுந்தர், மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு மற்றும் அரசு அலு வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



