கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் குமராட்சி அருகே உள்ள மெய்யாத்தூர் கிராமத்தில் குமராட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் வே.கோவிந்தசாமி தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் மெய்யாத்தூர் திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணயம், பகவதி முருகன், ஆனந்த ரட்சகன், ராஜவேல், பாபு ஆகியோர் இணைந்து அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் குமராட்சி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், அன்சாரி, சாமியப்பன், ராஜ மலையசிம்மன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



