துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தி.மு.கழக வழக்கறிஞர் அணி சார்பில், மாநகர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.அன்புச்செழியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் பி.ஆர்.அருள்மொழி, கே.எம்.தண்டபாணி, மருது பாண்டியன், அரசு வழக்கறிஞர்கள் ரவிச்சந்திரன், அருள்குமார், கிருஷ்ணமூர்த்தி, முத்து விஜயன், கண்ணன், விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



