fbpx
Homeபிற செய்திகள்கோவை, ராமநாதபுரம் மறைமாவட்ட நற்செய்தி விழாவில் ஆயர் பால் ஆலப்பாட் உரை: ‘இறை வார்த்தையால் கிறிஸ்தவ...

கோவை, ராமநாதபுரம் மறைமாவட்ட நற்செய்தி விழாவில் ஆயர் பால் ஆலப்பாட் உரை: ‘இறை வார்த்தையால் கிறிஸ்தவ வாழ்க்கை நிரப்பப்பட வேண்டும்’

கோவை, ராமநாதபுரம் மறை மாவட்டத்தின் 10வது நற்செய்தி பெருவிழா நடைபெற்றது. இதில் பேசிய மறை மாவட்டத்தின் பிஷப் மார் பால் ஆலப்பாட், கிறிஸ்தவ வாழ்க்கை இறை வார்த்தையால் நிரப்பப்பட வேண்டும். கடவுள் மனிதர்களுக்கு கருணை காட்டும் வழிகளை பைபிள் நமக்குக் கற்பிக்கின்றது, என்று கூறினார்.


தீர்க்கதரிசிகள் நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளனர். திருச்சபை ஒரு போராட்டமான திருச்சபை, எனவே திருச்சபை ஒரு வெற்றிகரமான திருச் சபை. திருச்சபையின் வார்த்தையை ஆராய்வதற்கான வாய்ப்புகள் பைபிள் மாநாட்டின் மூலம் சாத்தியமாகும் என்றும் பிஷப் மார் பால் ஆலப்பாட் கூறினார்.

முன்னதாக மறைமாவட்ட விகார் ஜெனரல் மோன் ஜோசப் ஆலப்பாடன் வரவேற்புரை ஆற்றினார். பிஷப் மார் பால் ஆலப்பாட் பைபிளை பிரதிஷ்டை நடத்தினார். முன்னதாக CMI மாகாண ப்ரொவின்ஷியல் சஜு சக்காலக்கல், அருட்தந்தை கெயில்ஸ் CMI மற்றும் அருட்தந்தை தாமஸ் கவுங்கல் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.


கோவை ஆரோக்கிய மாதா துணை மாகாண ப்ரொவின்ஷியால் அருட்சகோதரி டாக்டர் புஷ்பா சி.எச்.எஃப், கோவை ஜெய் ராணி மாகாண ப்ரொவின்ஷியல் அருட்சகோதரி ஷாலினி சி.எம்.சி, பாலக்காடு செராபிக் மாகாண ப்ரொவின்ஷியல் அருட்சகோதரி லிட்டில் ஃப்ளவர் எஃப்.சி.சி ஆகி யோரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வையொட்டி, அல்வேர்னியா பள்ளி ஆடிட்டோரியத்தில் நடை பெறும் பைபிள் மாநாட்டை அனக் கராவில் உள்ள மரியன் தியான மையத்தின் அருட்தந்தை டொமினிக் வாலமானல் தலைமையிலான குழு வழிநடத்துகிறது.


இன்று (22ம் தேதி) மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மாநாடு நடைபெறும். திருவழிபாடு, சௌக்கிய பிரார்த்தனை, விடுதல் பிரார்த்தனை, ஒப்புரவு, நற்கருணை ஆராதனை ஆகியவையும் மாநாட் டில் நடைபெறும்.

படிக்க வேண்டும்

spot_img