சென்னை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் – கலைப்பண்பாட்டுத்துறை தமிழக அரசின் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பரதநாட்டிய கலைஞர் சென்னை செல்வி சாத்விகா கோபிநாதன் பரதநாட்டிய விழா ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
அனைவரையும் முதல்வர் முனைவர் நளினி, ஆடிட்டர் கணேஷ் துணைவியார் ராதா கணேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
கல்லூரியின் தலைவர் வி.ராஜமாணிக்கம் தாளாளர் மற்றும் செயலாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் ஏ.பழனியப்பன், போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் எஸ்.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கவிதாலயம் ராமலிங்கம் செய்திருந்தார். பேரவைத் துணைத்தலைவர் ஏ.கோகுல் நன்றி கூறினார்.



