குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை டாக் வார இதழ் மற்றும் கோவை சாரதி இதழ் சார்பில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணப்பொருட்கள் வழங்கும் விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு துறைகளில் ஆளுமையுடன் திகழும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா கோவை காந்திபுரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவுக்கு கோவை டாக் வார இதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் பிரதாப் குமார், கோவை சாரதி இதழின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் ராகவன் தலைமை வகித்தனர். கோவை டாக் இணை ஆசிரியர் தங்க ராஜா, கோவை சாரதி இணை ஆசிரியர் மார்க் ஸ்டீபன் முன்னிலை வகித் தனர். கோவை டாக் செய்தியாளர் சுரேஷ் செல்வன், கோவை சாரதி செய்தியாளர் மார்ட்டின் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற மாவட்ட அமர்வு நீதிபதியும் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினருமான அ.முக மது ஜியாவுதீன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணப் பொருட்களை வழங்கியும் தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு விரு துகளை வழங்கியும் கௌரவித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக திரு வண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் டாக்டர் கணேசன், கோவை ராஜம் மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை மேலாண் இயக்குனர் டாக்டர் சௌந்திரவேல், முத்துஸ் மருத்துவமனை குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் முத்து சரவணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிச் செல்வன், குருடம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரவி, திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப்ஜோஸ், ஆதவன் புரமோட்டர்ஸ் சதீஸ்குமார், லீடர்ஸ் தொலைக்காட்சி நிறுவனர் வழக்கறிஞர் விஜய்ஆனந்த், சீனியர் துணை ஆசிரியர் முத்து.நாராயணசுவாமி, தமிழக நியூஸ் ஆசிரியர் உ.ஜெயச்சந்திரன், ஆலயா மகிமா
தொலைக்காட்சி மேலாண் இயக்குனர்கள் யோகேஷ், ப.கார்த்திகா, நீலகிரி டாக் ஆசிரியர் கே.ஆர்.உதயகுமார், தேவர் முன்னேற்ற இளைஞர் பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் வெ.ரா.வினோத், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம், அரசம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் கே.எம்.எஸ். சுந்தரராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலக ஓய்வு பெற்ற வழக்கறிஞர் கே.வி.சக்கரவர்த்தி, வழக்கறிஞர் கார்த்திக் பிரபு, நியூஸ் 7 தொலைக்காட் சியின் திருச்சி மண்டல செய்தியாளர் சு.அருண் குமார், கோவை மீடியா நிறுவனர் க.மருதாசலம், புகைப்படக் கலைஞர் செந்தில், மூத்த பத்திரிகையாளர் ஆரோக்கியசாமி, இனிய தமிழகம் பத்திரிகை ஆசிரியர் ராஜேந்திரகுமார், விஎம்கே. பேக்ஸ் உரி மையாளர் குமரேசன், போகஸ் மீடியா டிஜிட்டல் ஜோன் உரிமையாளர் ஏ.கே.சத்தியமூர்த்தி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.



