fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் சங்கத்தின் சுகாதார மாநாடு

கோவையில் இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் சங்கத்தின் சுகாதார மாநாடு

இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில் சுகாதார மாநாடு கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

நிலைத்தன்மையில் இருந்து விரிவாக்கம் வரை ஒவ்வொரு மருத்துவமனை தரத்தையும் வலுப்படுத்துதல் என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாக இருந்தது. இதில் தமிழ்நாட்டின் 5 மண்டலங்களிலிருந்தும் இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரபல தொழிலதிபர் டாக்டர்.ஜெயராம் வரதராஜ் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.

கங்கா மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனைகள் தலைவர் டாக்டர். ராஜசேகரன் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் டாக்டர். கிரிதர் க்யானி மற்றும் இந்த சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். அலெக்சாண்டர் தாமஸ் சிறப்பு உரை வழங்கினர்.

தொடக்க அமர்வின்போது, இந்த சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் டாக்டர். கிரிதர் க்யானி, மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையேயான சவால்கள் நிறைந்த உறவு பற்றி பேசினார்.

இந்த சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். அலெக்சாண்டர் தாமஸ், சுகாதார நிறுவனங்களில் தரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். நவீன சுகாதாரச் சூழலில், உயர் தரத்தை அடைவது ஒரு இலக்காக மட்டும் இருக்காமல், ஒரு மருத்துவமனையின் வளர்ச்சி மற்றும் நீடித்த நிலைத்தன்மைக்கான அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் மற்றும் தேவதாஸ் மருத்துவமனை இணைத் தலைவர் டாக்டர். சதீஷ் தேவதாஸ், மருத்துவமனைகளுக்கான நீடித்த நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றிப் பேசினார்.

இந்த துவக்க நிகழ்வில், கங்கா மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் இயக்குநர் ராமா ராஜசேகரன், ஜெம் மருத்துவமனையின் இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர். பிரவீன் ராஜ், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடலின் நிர்வாக இயக்குநர் டாக்டர். அருண் பழனிசாமி, சேலம் கோபி மருத்துவமனையின் இயக்குநர் அசோக் குமார், கேஜி மருத்துவமனையின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஜெயக்குமார், எப்.எல்.ஏ. பி. ஹெல்த்கேர் நிறுவனர் அடேல், ஸ்ரீகமாட்சி மருத்துவ மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர். எம்.கே. எனியன் மற்றும் ஃப்ரண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் துணைத் தலைவர் சந்தியா செரியன் ஆகியோரும் இந்த துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img