மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தேர்தலில், தலைவர் பதவி உள்பட 13 பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த 13 பேருக்கு எதிராக யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் குழுவினர் புதன்கிழமை அறிவித்தனர்.
13 பதவிகளுக்கு வேட்பு மனு அளித் தோருக்கு எதிராக யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர் என கூறப்பட்டது. தலைவர் பதவிக்கு, தற்போ தைய மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சேலம் சி.தனராஜ், மீண்டும் தலைவராக பதவியேற்க உள்ளார்.
இவருடன், துணைத்தலைவர்களாக ஜி.சுப்பு(கிழக்கு மண்டலம்), கே.செல்வராஜ் (மேற்கு மண்டலம்), எஸ்.லோகநாதன்(வடக்கு மண்டலம்), யுஎம்எஸ். நிஜாத்ரஹ்மான்(தெற்கு மண்டலம்), கே.ஜி.ராஜேந்திரன் (மத்திய மண்டலம்), செயலாளராக மதுரை சி.சாத்தையா, இணைச் செயலாளர்களாக வி.ஆறுமுகம்(கிழக்கு மண்டலம்), சி.துரை சாமி(மேற்கு மண்டலம்), எஸ்.ராஜேஸ்(வடக்கு மண்டலம்), ஜி.விவேகா னந்தன்(தெற்கு மண்டலம்), கே.கணேசன்(மத்திய மண்டலம்), பொருளா ளராக கரூர் எஸ்.நந்த கோபால் ஆகியோர் விரைவில் பதவியேற்க உள்ளனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் நாமக்கல் – பரமத்தி சாலையில் உள்ள முன்னாள் சம்மேளன தலைவர் அமரர் டிரான்ஸ்போர்ட் ரத்னா பிஎஸ்ஏ.செங்கோடன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தேர்தல் நடத்தும் குழுத் தலைவர்களாக திருச்செங்கோடு என்.பி.வேலு, சங்ககிரி குமாரசுவாமி, திருச்செங்கோடு மூர்த்தி, சேலம் அன்பு ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.



