fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்: தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்: தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம்

சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 வதுபிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் ஒற்றுமை தினமாக செயல்படுத்தும் வகையில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட காவல்துறை சார்பில், சந்தார் வல்லபாய் படேலின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஏடிஎஸ்பி ஜெரால்டு அலெக்சாண்டர், தேனி டிஎஸ்பி முத்துக்குமார், தேனி நகர காவல் ஆய்வாளர்கள் ராமலட்சுமி, ஜவகர், தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜ்ஜு குமார், ஆகியோர் முன்னிலையில் இந்த ஊர்வலத்தினை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா சிறப்புரையாற்றி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பெரியகுளம் சாலையில் உள்ள கான்வென்ட் பள்ளியில் தொடங்கிய ஊர்வலமானது பெரிய குளம் சாலை ரயில்வே கேட் வரை சென்றடைந்து மீண்டும் கான்வென்ட் பள்ளியில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் போதை பொருள் தடுப்பு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு, சைபர் குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு விழிப் புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்

இந்த ஊர்வலத்தில் தேனி தொழிற்பயிற்சி மையத்தின் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் காவல் துறையினர் பங்கேற்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img