கோவை கொங்குநாடு மருத்துவமனையின் சார்பாக உலக பக்கவாத விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை குளோபஸ் சென்டர் சரவணம் பட்டியில் மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கொடியேற்றி துவக்கி வைத்துள்ளார்கள்.
இதன் டீ சர்ட் வெளியிட்டு விழாவில் கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி ராஜு, கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, கொங்குநாடு மருத்துவமனையில் மூளை மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பால செந்தில்குமரன், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயக்குமார், பொது மருத்துவர் டாக்டர் பிரணவ் சக்திகுமார், பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



