fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியில் ரத்ததானம் -புகையிலை விழிப்புணர்வு முகாம்

ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியில் ரத்ததானம் -புகையிலை விழிப்புணர்வு முகாம்

ஈரோடு, மேட்டுக்கடையில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்ததான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு நன் கொடையாளர்களிடம் இருந்து ரத்த தானம் பெற்றனர்.

இம்முகாமில் நசியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் (பொ) எ.ஆதி பராசக்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ரகு, எம்.கௌரிசங்கர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.மனோகரன், உதவி பேராசிரியர் டி.பிரேம் ஆனந்த், உடற்கல்வி துறை கவின் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img