திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தில் (போலீஸ் ஸ்டேஷன் அருகில்) அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக பயிற்சி பெறும் மாணவர் களுக்கு இலவச கையேடுகள் (நோட்ஸ்) வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அன்புள்ளம் அறக்கட்டளை தலைவர் முஹம் மது உசேன் (பிடிஓ& ஓய்வு), ராஜா ரவிவர்மா (முன்னாள் எம்பி), சயீத் இப்ராஹிம் (ஓய்வுபெற்ற வேளாண்மை அதிகாரி), குழந்தைவேல் (ஓய்வு பெற்ற உதவிப்பொது மேலாளர், யுகோபேங்க்), கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு இலவச கையேடுகளை வழங்கி, பயிற்சி பெறுபவர் கள் வெற்றிபெற வாழ்த்திப்பேசினர்.
மரத்தடி மைய இயக்குனர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.



