fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் பிரம்மாண்ட புதிய ஷோரூம் திறப்பு விழா

கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் பிரம்மாண்ட புதிய ஷோரூம் திறப்பு விழா

ஜோஸ் ஆலுக்காஸ், கோவை மாநகரில் அதன் புதிய மிகப்பெரிய ஷோருமை திறந்திருக்கிறது. தமிழ்நாட்டுடன் அது கொண்டிருக்கும் நீடித்த பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் இந்நிகழ்வு, இம்மாநில மக்களுடன் ஜோஸ் ஆலுக்காஸ் கொண்டிருக்கும் நீண்ட கால நல்லுறவை மேலும் ஆழமாக்கியிருக்கிறது.

ஜோஸ் ஆலுக்காஸின் பிராண்டு தூதரும், திரைப்பட நடிகருமான ஆர்.மாதவன் இந்த பிரம்மாண்ட ஆபரண ஷோரூமை திறந்து வைத்தார்.

ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் சுய வரலாறு புத்தகமான ‘தங்கம்‘ (கோல்டு) என்பதன் தமிழ் பதிப் பையும் நடிகர் மாதவன் வெளியிட்டு அறிமுகம் செய்தார்.

கோலாகலமாக நடைபெற்ற இத்திறப்பு விழாவில் ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ், பால் ஆலுக்காஸ் மற்றும் ஜான் ஆலுக்காஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

கோவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கணபதி ராஜ்குமார், மாநகரின் மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இரு தளங்களுடன் 8000 சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த புதிய ஷோரூம், கோயம்புத்தூரில் ஜோஸ் ஆலுக்காஸின் மிகப்பெரிய ஆபரண விற்பனையகமாகும்.

வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட இனிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கென இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரபல பிராண்டின் தங்க, வைர, பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் ஒட்டுமொத்த அணிவரிசையும் இந்த ஷோரூமில் இடம்பெற்றிருக்கிறது.

மணப்பெண்ணுக்கான ஆபரணங்கள், விழாக்கால மற்றும் நவீன ஆபரண கலெக்ஷன்கள் என பல்வேறு வகையினங்களின் கீழ் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு ஆபரணமும் இந்த பிராண்டின் தனி முத்திரையான நகை வடிவமைப்பில் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது.

பாரம்பரியமான படைப்பாக்கத் திறன் மற்றும் நவீன வடிவமைப்பு உத்திகளின் நேர்த்தியான கலவையாக ஆபரணங்களின் அணிவரிசைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்காஸ் இத்தொடக்க விழா நிகழ்வில் பேசுகையில், “தமிழ்நாட்டின், குறிப்பாக கோயம்புத்தூர் மாநகரின் மக்கள், ஜோஸ் ஆலுக்காஸின் பயணத்தை வடிவமைத்து மேம்படுத்துவதில் மிகச்சிறப்பாக பங்காற்றியிருக்கின்றனர்” என்றார்.

நடிகர் மாதவன் இந்நிகழ்வில் பேசுகையில், ‘ஜோஸ் ஆலுக்காஸ் உடனான எனது உறவும், பிணைப்பும் எப்போதும் ஆழமானதாகவும், தனித்துவமானதாகவும் இருந்து வருகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img