fbpx
Homeபிற செய்திகள்செங்குந்தர் கல்லூரி மாணவர்கள் விமான வடிவமைப்பில் புதிய முயற்சி

செங்குந்தர் கல்லூரி மாணவர்கள் விமான வடிவமைப்பில் புதிய முயற்சி

கேரளா மாநிலம் பாலக்காட்டில் செயல்பட்டு வரும் என். எஸ்.எஸ்.பொறியியல் கல்லூரி ட்ரோன் வடிவமைத்தலில் உள்ள சவால்கள் 2025” என்ற தலைப்பில் செப்டம்பர் 27, 28 தேதிகளில் பயிற்சிப் பட்டறையை நடத்தியது.

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் இயங்கி வரும் புதுமை மற்றும் தொழில் முனைவோர் மையம் மற்றும் ட்ரோன் வளர்ச்சி மையத்தில் உள்ள அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி ரோபோடிக்ஸ், இயந்திரவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறியியல் துறைகளில் பயிலும் 10 மாணவ மாணவிகள் பங்கேற்று விமான வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் காற்றியக்கவியல் மற்றும் அழகியல் சார்ந்த தனித்துவமான விமான மாதிரியை வடிவமைத்தனர்.

இந்நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 72 குழுக்கள் பங்கேற்றன. இதில் இக்கல்லூரி மாணவர்களின் புதிய முயற்சி பல்வேறு தொழில்நுட்பக் குழுக்களின் பாராட்டை பெற்றது.

இப்புதிய முயற்சியை கல்லூரி முதல்வர் வி.வெங்கடாச்சலம் தாளாளர் ஜி.கமலமுருகன், செயலாளர் எஸ்.என்.தங்கராஜு பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img