கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு மற்றும் கட்டட பொறியியல் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உடன் இணைந்து, கணியூர் கிராமத்தில் நெகிழியில்லா சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணியை நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மேலும் கோவை டிஆர்டிஏ, கூடுதல் ஆட்சியர் (மேம்பாடு) சங்கேத்வாகே பல்வந்த், கோவை டிஆர்டிஏ, உதவி வனப் பாதுகாவலர் அகெல்லா சைதன்யா மாதவுடு, உதவி திட்ட அலுவலர் (இன்ஃப்ரா2) அப்துல்வஹாப், உதவி திட்ட அலுவலர் (என்ஆர்இஜிஎஸ்) சௌந்தர்யா மற்றும் ஒருங்கிணைப்பாளர் எம்.கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேபிஆர் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கிராம மக்களுடன் ஒன்றிணைந்து, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



