ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி (கேஎன் எம்எஸ்) மாணவர்கள் அக்டோபர் 5-7 தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதல்வர் கோப்பை கேரம் இரட்டையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
ஒன்பதாம் வகுப்பு எஸ்.டி.தனிஷ் பாரதி மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு எஸ்.டி. நிதிஷ் சேகுவேரா ஆகியோர் மாநில அளவிலான சாம்பியன்களாகத் தேர்வாகி தங்கப் பதக்கங்களையும் ரூ.1,50,000 ரொக்கப் பரிசையும் பெற்றனர்.
அவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் கே.செங்கோட்டுவேலன் மற்றும் முதல்வர் கே.மைதிலி ஆகியோர் வாழ்த்தினர்.



