fbpx
Homeபிற செய்திகள்ஜே.சி.ஐ அங்கீகாரம் பெற்று காவேரி மருத்துவமனை சாதனை

ஜே.சி.ஐ அங்கீகாரம் பெற்று காவேரி மருத்துவமனை சாதனை

காவேரி மருத்துவமனை குழுமத்தின் ஆழ்வார் பேட்டை மருத்துவமனையா னது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீ காரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை அங்கீகாரத் தின் மூலம், இந்தியாவில் ஜே.சி. ஐ- பல அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் கொண்ட வெகு சில பிரத் யேக மருத்துவமனைகளின் பட்டியலில் காவேரி இணைந்தி ருக்கிறது. இதன் வழியாக, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைக் கான ஒரு நம்பகமான மையம் என்ற தனது வலுவான அந்தஸ்தை காவேரி மருத்துவமனை குழுமம் மீண்டும் உறுதி செய்துள்ளது.ஜே.சி.ஐ 8-வது பதிப்பின் தரநிலைகள், உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் மிகவும் கடுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அளவு கோல்களைக் குறிக்கின்றன. அளவிடக்கூடிய 1,094 கூறுகளை உள்ளடக்கிய இந்தத் தரநிலைகள் தொடர் முன்னேற்றத்துக்கு முக்கி யத்துவம் அளிக்கின்றன.

இது குறித்து, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
சிகிச்சை பெறுபவர் பாதுகாப்பு, தொற்று கட்டுப் பாடு, மருத்துவ நிர்வாகம் மற்றும் தொடர்ச் சியான முன்னேற் றத்திற் கான உலகளாவிய தர நிலைப்படுத்தப்பட்ட அமைப்புகளை ஜே.சி.ஐ அங்கீகாரம் உறுதி செய் கிறது. சேர்க்கை முதல் வெளியேற்றம் வரை பராமரிப்பின் ஒவ்வொரு படியும் குறைவான மருத்துவ பிழைகள், விரைவான மீட்பு மற்றும் சிகிச்சை பெறு பவர் திருப்திக்கு வழிவகுக்கும் சான்றுகள் சார்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜே.சி.ஐ.யின் தர அங்கீகாரம் பெற்ற இரு கிளைகளுடன் இயங்கும், காவேரி மருத்துவமனை குழுமம், மருத்துவச் சிகிச் சையில் மேன்மை மற்றும் நோயாளிகளுக்கான பாதுகாப்பில் ஒரு புதிய தர அளவு கோலை நிர்ண யிக்கிறது. இதன் மூலம், இந்திய மக்களுக்கும் மற்றும் உலகளாவிய சமூ கத்தினருக்கும் நம்பகமான, மிக உயர்ந்த சிகிச்சை பராமரிப்பை உறுதி செய்யும் மருத்துவச் சேவையின் தலைநகராக புகழ் பெற்றிருக்கும் சென் னையின் நற்பெயரை இது மேலும் வலுப்படுத்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img