fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஜுவல் ஒன் நிறுவனம் சார்பில் போதைப் பொருள் தீமை குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோவையில் ஜுவல் ஒன் நிறுவனம் சார்பில் போதைப் பொருள் தீமை குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோவை துடியலூர் அருகே ராக்கி பானஸ்ரி பள்ளிக்கூடம் அருகே ஜுவல் ஒன் நிறுவனத்தின் சார்பில் கிரிஷா அறக்கட்டளை சார்பில் போதைப் பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு வயதினரைக் கொண்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர்.

எமரால்ட் மற்றும் ஜுவல் ஒன் நிறுவனத்தின் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் முழுமையான ஆரோக்கியமான வாழ்வை நோக்கமாகக் கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 10 கிமீ, 5 கிமீ பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக ஓட்டம் நடைபெற்றது.

ஜுவல் ஒன் நிறுவன மேலாளர் சிவிலியன், கிரிஷா அறக்கட்டளை தலைவர் ஜெயசீலன், பல்வேறு மருத்துவர்கள் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில் முதலிடம் பெற்றவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் என பரிசுகள் வழங்கப்பட்டன. கோப்பைகள் மற்றும் மெடல்களும் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img