கோவையில் பணியாற்றிய பெண் மிஷனரிகளின் வாழ்க்கைத் தொகுப்பான கோவையின் புனிதவதிகள் என்ற நூல் வெளியிடப்பட்டது.
இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆலயத்தின் தலைமை ஆயரும் கோவைப் பேராயத்தின் செயலருமான பிரின்ஸ் கால்வின் நூலை வெளியிட முதல் பிரதியை மூத்த ஆயரும் வரலாற்று அறிஞருமான பிலிப் மல்லி பெற்றுக்கொண்டார். குளோ பல் மெதடிஸ்ட் திருச்சபை ஆயர் கிரேஸ் ஐடா ராஜன், பதிப்பா ளர் ஜெபகுமார், ஆலய செயலர் சந்திரன், ஹெரோலின் மஞ்சுளா, நூலாசிரியர் நிக்கோடிமஸ் ஆகியோர் பங் கேற்றனர்.
இதில், லண்டன் மிஷன் (LMS) சார்பாக கோயமுத்தூரைத் தலைமை யிடமாகக் கொண்டு பணியாற்றிய 44 பெண் மிஷனரிகளின் வாழ்க்கைக் குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் தரப்பட் டுள்ளன. அவர்களில் சூசன்னா எமிலியா 1832இல் துவக்கப்பட்ட கோவையின் முதல் பெண்கள் பள்ளியின் ஆசிரியராக இருந்தார். அவருக்குப் பின் வந்த பெண் ஊழியர்கள் மேலும் பள்ளிகளையும் கிராமப்புற பெண்கள் தங்கிப் படிக்க விடுதியையும் ஆரம்பித்தனர்.
கடைசியாக 1983இல் வந்த டோரா ஸ்மித் தொழிற் கல்வி நிலையத்தை துவக்கி பெண்கள் சுயதொழில் செய்யவும் வேலை வாய்ப்பைப் பெறவும் பயிற்சி அளித்தார். இவர்கள் 150 ஆண்டுப் பணிகள் மூலம் கோவையில் ஏற்பட்ட கல்வி, சமூகப் பொருளாதார முன்னேற்றங்கள் இந்த நூலில் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.



