தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை 2025 விளையாட்டில் கூடைப்பந்து மற்றும் கோ-கோ ஆகிய இரு விளையாட்டு போட் டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது.
கோவை வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து போட்டி நடைபெறும் நிலையில், நாளை வரை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. 38 மாவட்டங்களில் இருந்து தலா ஒரு மாணவர் மற்றும் மாணவியர் அணிகள் என 76 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
முதற்கட்டமாக, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் நாக்-அவுட் முறையில் போட்டியிட்ட 38 மாவட்டங்களிலிருந்து 4 மாவட் டங்களை சேர்ந்த அணிகள் லீக் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

4ஆம் நாள் (அக்டோபர் 5ஆம் தேதி) நடந்த நாக்- அவுட் போட்டியில், மாணவியருக்கான பிரிவில், தூத்துக்குடி – மயிலாடுதுறை இடையேயான போட்டியில், 65 & -37 என்ற புள்ளிக்கணக்கில், தூத்துக்குடி அணி வென்றது; திருவண்ணாமலை – சேலம் இடையேயான போட்டியில், 67 -68 என்ற புள்ளிக்கணக்கில், சேலம் அணி வென்றது; சென்னை – திருவள்ளூர் இடையேயான போட்டியில், 57 -& 17 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை அணி வென்றது. ஈரோடு , – கோவை இடையேயான போட்டியில், 40 – 80 என்ற புள்ளிக்கணக்கில், கோவை அணி வென்றது. அடுத்து, மாணவர்களுக்கான பிரிவில், சென்னை, – மதுரை இடை யேயான போட்டியில், 85 -& 80 என்ற புள்ளிக்கணக்கில், சென்னை அணி வென்றது; திருநெல்வேலி – தேனி இடையேயான போட்டியில், 41 – 74 என்ற புள்ளிக்கணக்கில், தேனி அணி வென்றது; கோவை – தூத்துக்குடி இடையேயான போட்டியில், 85 &- 77 என்ற புள்ளிக்கணக்கில், கோயம்புத்தூர் அணி வென்றது. சேலம் – திருவள் ளூர் இடையேயான போட்டியில், 37 – 76 என்ற புள்ளிக்கணக்கில், திருவள்ளூர் அணி வென்றது.
ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளிலும், சென்னை, கோவை அணிகள் இடம்பெற்றுள்ளது. லீக் போட்டியில் மோதும் 4 அணிகளில், அதிக புள்ளிகள் பெறும் அணிகள் முதல் இடம் பெற்று வெற்றிபெறும். அடுத்தடுத்து புள்ளிகள் பெறும் அணிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறும்.
கூடைப்பந்து போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் அணி கள் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.
வெற்றிபெறும் முதல் அணிகளுக்கு 9 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக, ரூபாய் 6 லட்சமும், மூன்றாம் பரிசாக, 3 லட்சம் ரூபாயும் வழங் கப்பட வுள்ளது. இந்த போட் டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போக்குவரத்து, உணவு, தங்கும் வசதி என அனைத்து வசதி களும் விளையாட்டு துறை சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது உத்வேகத் துடன் விளையாட முடிவதாக போட்டியில் பங்கேற்றுள்ள மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



