fbpx
Homeபிற செய்திகள்கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் இன்றுமுதல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் இன்றுமுதல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோவை நேரு ஸ்டேடியம் அருகே மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழா இன்று (25ம் தேதி) நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை சரண்யா பிரபு பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு வந்த அனைவரையும் கோ ஆப் டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் ப.அம்சவேணி, கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் துணை மண்டல மேலாளர் லட்சுமி பிரபா, மேலாளர் செல்வத்துரை, மேலாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்.

இது குறித்து முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி கூறியதாவது:-
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு இரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது, காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது.

தீபாவளி 2025 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 15.09.2025 முதல் 30% அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. மேலும் அரசுப் பணியாளர்களுக்கும், தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கும் கடன் விற்பனை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தீபாவளி 2025 சிறப்பு விற் பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், ஆடவர் அணியும் ரெடிமேட் சட்டைகள், மகளிர்விரும்பும் சுடிதார் ரகங்கள் சேலைகள் விற்பனைக்காக வைக் கப்பட்டு உள்ளன. மேலும் இந்த ஆண்டு பழசுக்கு புதுசு என்றதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.அதன்படி வாடிக்கையாளர்கள் ஒரிஜினல் ஜரிகை உள்ள பழைய பட்டு புடவைகளை கொண்டு வந்து புதிய பட்டுப் புடவைகள் வாங்கிச் செல்லலாம். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img