fbpx
Homeபிற செய்திகள்மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் நந்தா பாலிடெக்னிக் சாதனை

மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் நந்தா பாலிடெக்னிக் சாதனை

பாலிடெக்னிக் கல்லூரிகள் இடையேயான தடகள சங்கத்தின் (IIPA) சார்பாக ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான வாலிபால் போட்டி நந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்றது.

முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், கல்லூரியின் முதல்வர் ஜி.மோகன்குமார் வரவேற் புரை நிகழ்த்தினர். பல்வேறு சுற்றுகளில் 12 அணிகள் மோதின.

இறுதி போட்டியில் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியினை வீழ்த்தி நந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாநில அளவில் பங்கு பெறுவதற்கு தகுதிப்பெற்று சாதனை படைத்தது.

படிக்க வேண்டும்

spot_img