fbpx
Homeபிற செய்திகள்101 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் வழங்கிய அறக்கட்டளைகள்

101 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் வழங்கிய அறக்கட்டளைகள்

ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை, முக்தி எம்.எஸ். தாதா அறக்கட்டளையுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கை-கால்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்றது.


இதில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் எம்.லட்சுமி, தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த 101 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் வழங்கப்பட்டது.

இதுவரை இந்த நிகழ்ச்சியின் மூலம் மொத்தம் 253 மாற்றுத்திறனாளிகள் பலன் அடைந்துள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அறக்கட்டளை இலவச திருமணங்களை நடத்தி இருப்பதோடு, பெண்கள் கல்லூரிகளுக்கு கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளது.


இது குறித்து ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மனு கோயல் கூறுகையில், “எங்கள் அறக்கட்டளை தனிநபர்களுக்கு இலவச செயற்கை கால்கள் மற்றும் காலிபர்களை வழங்குவதன் மூலம் அவர்கள் தங்களின் அன்றாட செயல்களை எந்தவித சிரமும் இல்லாமல் செய்வதற்கு உதவி வருகிறது” என்று தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், முக்தி & எம்.எஸ். தாதா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மீனா தாதா மற்றும் ஓம் பிரகாஷ் மோடி, தலைவர் முராரிலால் சோந்தாலியா, பொருளாளர் சிவகுமார் கோயங்கா, மனோகர்லால் பகாரியா கே.கே. குப்தா, ராகேஷ் கோயல், விஷால் அகர்வால் மற்றும் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆதித்ய அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த விழிப்புணர்வு முகாமில் ஹரிஜன் சேவக் அமைப்பின் தலைவர் மாருதியும் கலந்து கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img