கோவை துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2016 முதல் 2024 வரை பட்டம் பெற்ற மாணவ மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாணவ சங்கத் தலைவர் வீணா ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் தலைமை தாங்கி இந்த 25 ஆண்டுகளில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளை வளர்ந்த விதத்தை விவரித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தர்ராஜன் உரையாடும் போது முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தை பற்றியும், இந்தியா மற்றும் வெளிநாடு கிளைகள் வளர்ச்சி அடைந்ததற்கு உறுதுணையாக இருந்த முன்னாள் மாணவர்களின் பல்வேறு சேவைகளை குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராக தமிழ் ஆசிரியை மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் கோவை சாந்தாமணி கலந்துகொண்டு கல்லூரிக்கு பல்வேறு வகையில் சேவை புரிந்த முன்னாள் மாணவ மாணவியருக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
2016 முதல் 2024 வரை இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று இந்தியா மற்றும் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக விழா மலர் வெளியிட்டு சிறப்பாக படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மாண வர் விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் வீணா, செயலாளர் செந்தில் கண்ணன் மற்றும் பேராசிரியர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.



