கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர், மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள் ளிப்பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பில், 50-ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை குருநானக் கல்லூரியில் உள்ள சரகரி சூட்டிங் அகாடமியில், அண்மையில் நடைபெற் றது. 3 பொசிசன், 10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 80 துப்பாக்கிச் சுடும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், 50 மீட்டர் ரைபிள் புரோன் ஆண்கள் சீனியர் பிரிவில் பங்கேற்ற, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி எம்.பி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் எஸ்.திவாகர் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென் றார். இதன்மூலம் திருச்சியில் நடைபெற உள்ள தென் மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் எஸ்.திவாகரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங் காவலர் திரு சுந்தர் ராமகிருஷ்ணன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.



