தூத்துக்குடி மாநகராட் சிக்கு உட்பட்ட ஸ்டெம்பூங்காவில் தனது முன்னெடுப்பில், தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தினசரி நிர்வாகத்திற்கு உதவிடவும், மக்கள் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணவும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சியை தொடங்கி வைத்தார் தூத் துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செய லாளரும், திமுக நாடாளு மன்றக் குழு தலைவருமான கனிமொழி எம்.பி.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி – திருநெல் வேலி சாலையில் உள்ள சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதி உதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, நபார்ட் டிடிஎம் சுரேஷ் இராமலிங்கம், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



