fbpx
Homeபிற செய்திகள்ப்ரீட்லிங் புதிய கிளை கோவையில் திறப்பு

ப்ரீட்லிங் புதிய கிளை கோவையில் திறப்பு

பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனம் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது. இந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் திறக்கப்பட்ட ஆறாவது கிளை என்பது பெருமைக்குரியது.

தனித்துவமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில், 1000 சதுர அடி பரப்பளவில், இந்த புதிய பொட்டிக் நேர்த்தியாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மற்றும் நவீன வசதிகள் இணைந்த ஓர் அழகான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங் குகிறது. இந்தியாவில் முதன் முறையாக ஸ்பாட்லைட் மிரர் அனுபவத்துடன் ப்ரீட்லிங் பெண்களுக்கான பிரத்யேக வாட்ச் கலெக்சன் அறிமுகப்படுத்தியுள் ளது. வாடிக்கையாளர்கள் நேரடி யாக அணிந்து பார்த்து விருப்ப மானதை தேர்வு செய்யலாம்.

ப்ரீட்லிங் கிளையின் மையப் பகுதியில், ‘பி’ லோகோவுடன் கூடிய அழகிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கை யாளர்கள் அமர்ந்து பிடித்தமான, பொருத்தமான வாட்ச் தேர்வு செய்வதற்கு ‘ப்ரீட்லிங் வாட்ச் பார்’ என்ற அமைப்பும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அலங்கார கட்டமைப்பு வாடிக் கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் என்பதில் ஐயம் இல்லை.
புதிய கிளை குறித்து ப்ரீட்லிங் இந்தியா நிர்வாக இயக்குனர் பிரதீப் பானோத் கூறியதாவது:


இந்தியாவில் எங்கள் ரீடெய்ல் பங்குதாரர் ஆன, ஜிம்சன் உடன் இணைந்து புதிய கிளையை திறந்ததில் மகிழ்ச்சி அடைகின் றோம்.
எங்கள் நிறுவன விரி வாக்க திட்டத்தில் இது முக்கியத் துவம் வாய்ந்த தருணம். தென் னிந்தியாவில் கிடைக்கும வர வேற்பு உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், வாடிக் கையாளர்களை பிரைட்லிங் உலகத்தின் அனுபவத்தை நேரடி யாக உணர வரவேற்க காத்திருக் கின்றோம்.’’ என்றார்.

ஜிம்சன் கோவை இயக்குநர் நவாஸ் கூறியதாவது:


“ப்ரீட்லிங் நிறுவனத்துடன் எங்களது கூட்டுறவை வலுப்படுத் துவதில் பெருமிதம் அடைகிறோம். ஜிம்சன் நோக்கம் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பர உயர்தர வாட்ச் பிராண்டுகளை அவர்களின் கரங்களில் கொண்டு சேர்ப்பதேயாகும். தென்னிந் தியாவில் உயர்தர வாட்ச்-களுக்கான ஆர்வம் அதிகம் காணப்படுகிறது. இந்த புதிய கிளை வாட்ச் பிரியர்களுக்கு உயர் தர அனுபவத்தை அளிக்கும்.’’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img