fbpx
Homeபிற செய்திகள்சேலம் சாமிநாதபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி திருவிழா

சேலம் சாமிநாதபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி திருவிழா

சேலம் சாமிநாதபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவானது கடந்த வாரம் கொடியேற்று விழாவினை தொடர்ந்து தினமும் திருப்பலியுடன் நடைபெற்று வந்தது.

திங்கள்கிழமை புனித ஆரோக்கிய அன்னை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேர் பவனியானது கூட்டு சிறப்பு திருப்பலியுடன் நிகழ்ந்தது.


முன்னதாக தேர் பவனியை சேலம் மறை மாவட்ட ஆயர் மைக்கேல்ராஜ் செல்வம் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியை குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை ஜெய பெர்னார்ட் ஜோசப், மூவேந்தர் அரங்கு இயக்குனர் சகாயராஜ் ஆகியோர் வழி நடத்தினர். தேர் பவனியானது சாமிநாதபுரம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆர்.டிபால் தெரு ,டாக்டர் ரத்தினம் தெரு மற்றும் அல்ராஜ் தெருவில் நிறைவு பெற்றது.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான இறை பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img