fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டல் சார்பில் மலைவாழ் மக்கள் நல முகாம்

யூத் ஹாஸ்டல் சார்பில் மலைவாழ் மக்கள் நல முகாம்

யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கொங்கு கிளை ஈரோடு கலைக் கல்லூரி வணிகவியல் தொழில் முறை கணக்கியல் துறை மற்றும் ஈரோடு மத்திய ரோட்டரி குழுவுடன் இணைந்து கொங்காடை அரசு மலைவாழ் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் மலைவாழ் மக்கள் நல முகாம் நடத்தியது.

வணிகவியல் துறை தலைவர் டாக்டர். பியூலா, யூத் ஹாஸ்டல் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ராஜா, பர்கூர் வனச்சரகர் கிருஷ் ணவேணி, ரோட்டரி தலைவர் சிவ பிரகாசம், பேராசிரியை டாக்டர் நந்தினி கொங்காடை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், டாக்டர் சிவக்குமார், இணைச் செயலர் ராஜ சூர்யா, ரோட்டரி சங்கம் ஐயப்பன், கார்த்திகேயன், ஜோதி குமார், முத்துசாமி கலந்து கொண்டனர்.
பள்ளியில் படிக்கும் சுமார் 200 மாணவ மாணவியர்களுக்கு. உணவு தட்டு, பள்ளி சாதனங்கள், துணி வகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த முகாமை கொங்கு கிளையின் தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல் மற்றும் டாக்டர் பியூலா ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img