ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
இதில் சிதம்பரம் காஸ்மோபாலிட் டன் லயன்ஸ் சங்கத் தலைவர் ஆர்.இளஞ்செழியன் தலைமை வகித்தார். தொழிலதிபர் டி.என். ஆர்.அரவிந்தன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் என்.சத்திய மூர்த்தி வரவேற்றார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பா டியன் முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் 285 பயனாளிகள் கலந்து கொண்டனர். டாக்டர் சுனில்குமார், ஹரிணி, ஜித்தின், ஜெனியா, திருவேங்கடம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் இலவச கண் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இரண்டாம் துணை நிலை ஆளுநர் லயன்ஸ் கமல் கிஷோர் முன்னிலையில் 70 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டி.என்.ஆர்.அரவிந்தன் இலவச கண் கண்ணாடிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், கல்வி யாளர் தில்லை ஆர். செந்தில்குமார் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் முகாமில் பங்கேற்றனர். பொருளாளர் ஆர்.வெங்கடேசன் நன்றி கூறினார்.



