fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் நடைபெற்ற 4வது தேசிய அளவிலான பாரா கிரிக்கெட்: தமிழ்நாடு அணி வெற்றி

சென்னையில் நடைபெற்ற 4வது தேசிய அளவிலான பாரா கிரிக்கெட்: தமிழ்நாடு அணி வெற்றி

அமர்வு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி கள் சென்னை தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை இந்திய அமர்வு கிரிக்கெட் சங்கம் மற்றும் ஜாயின் ஹேன்ஸ் சோசியல் வெல்பேர் ட்ரஸ்ட் இணைந்து நடத்தின. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா பிர தேசம், ஒடிஸா, உத்தர் பிரதேசம், கர்நாடகம், சத்தீஷ்கர், குஜராத் மற்றும் ராஜஸ்தான் என 9 அணிகள் பங்கேற்றன. முதல் இடத்தை தமிழ் நாடு, கர்நாடகம், ஒடிஸா மற்றும் ஆந்திரா முதல் 4 இடங்களை வென்றன. ட்ரஸ்ட் தலைமை நிர்வாகிகள் குமரேசன், ராஜேஷ் குமார் இந்த தொடரை சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.
இதற்கு உறுதுணையாக இந்திய அமர்வுக் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பால அரி தாஸ், முகம்மது கதாபி, சீனிவாசன், முனீஸ்வரன், நவாஸ் ஷேரிப், பார்த் திபன், முத்துக்குமரன், வெங்கடேசன், சுபாஷ், சந்துரு ஆகியோர் செயல் பட்டனர்.
தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் கோப்பையை வென்று தமிழ்நாடு அமர்வுக் கிரிக் கெட் அணி தொடர்ந்து நான்காவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதனை படைத்தது என்று இந்திய அமர்வு கிரிக்கெட் சங்கத்தின் தேசிய துணைத் தலைவரும் நந்தா கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனருமான தேவகாந் தன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img