கோவை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனக் குழுமம், 28 ஆண்டுகளுக்கும் மேலான தங்களின் கல்விச் சேவையை கொண்டாடும் வகையில் “எஸ்எஸ்விம் உருமாறும் இந்தியா மாநாடு 2025” என்னும் 4வது மாநாட்டை வரும் செப்டம்பர் 1 முதல் 3 வரை கோவையில் உள்ள எஸ்எஸ்விம் வேர்ல்ட் ஸ்கூலில் நடத்த உள்ளது.
இந்த மூன்று நாள் மாநாட்டில், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை இணைந்து உருவாக்க நாடு முழுவதும் உள்ள தொலைநோக்கு பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என ஏராளமான பேர் பங்கேற்க உள்ளனர்.
எதிர்காலத்தை நாம் நெருங்கவில்லை,- அது ஏற்கனவே இங்கே நம்மிடம் உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித ஆற்றலின் இணைந்த, புதிய சகாப்தம் படைக்க நாம் தயாராகி விட்டோம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
முன்னேற்றம் தொழில்நுட்பத் தால் மட்டுமல்ல, மனித புத்தி கூர்மை, மீள்தன்மை மற்றும் நெறி முறைகளாலும் வரையறுக்கப்படு கிறது. இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவு எப்படி நமது திறமை மற்றும் கற்பனையை வெளிப்படுத் துகிறது என்பதை எடுத்துக்கூற உள்ளது.
3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், பங்கேற்பாளர்கள் அதிநவீன கண்டுபிடிப்புகள், உருமாறும் உரையாடல்கள் மற்றும் மீள்தன்மை மற்றும் மறு கண்டுபிடிப்பு பற்றிய ஊக்கமளிக் கும் கலந்துரையாடல் என பல் வேறு மதிப்புமிக்க விஷயங்கள் இதில் இடம்பெற உள்ளன.
இது குறித்து எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் மணிமேகலை மோகன் கூறுகையில், இந்தியாவின் எதிர்காலத் தலைவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதன் தலைப்பானது, செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதநேயம் இணைந்து எப்படி புதுமையான எதிர்காலத்தை உருவாக்க உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஒவ்வொரு பங்கேற்பாளரும் – கல்வியாளர் அல்லது மாணவர் – இந்த தேசத்திற்கான மாற்றத்திற்கான காரணமாக இருப்போம் என்ற நம்பிக்கையுடன் வெளியேறுவதை உறுதி செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தொழில் முனைவோர், தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் என ஏராளமான பேர் பங்கேற்க உள் ளனர். அதில் ஜலஜ் டானி (இணை விளம்பரதாரர், ஆசிய பெயிண்ட்ஸ்; இயக்குனர்), ஹேவல்ஸ் (தலைவர், ஆட்வெர்ப், எண்டியூர்ஏர் – ஐஐஎம் திருச்சி), அங்கூர் வாரிகூ (நிறுவனர், வெப்வேடா; உள்ளடக்க உரு வாக்குநர்) ஷரன் ஹெக்டே – (தொழில் முனைவோர், உள்ளடக்க உருவாக்குநர்), ஜிபு எலியாஸ் (செயற்கை நுண்ணறிவு நெறிமுறையாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் ஆர்வலர்), லோகேஷ் கனகராஜ் (திரைப்பட இயக்குனர்), ரோஹித் கபூர் (தலைமை நிர்வாக அதி காரி, ஸ்விக்கி மார்க்கெட் பிளேஸ்), ஹர்ஷித் அகர்வால், பிரகாஷ் படுகோனே( முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர்), டாக்டர் எஸ்.ராஜா சபாபதி (பிளாஸ்டிக் சர்ஜரி தலைவர், கங்கா மருத்துவமனை), டாக்டர் மணிமேகலை மோகன் (நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர், எஸ்எஸ்விம் நிறுவனங்கள்), ஸ்ரீஷா மோகன்தாஸ் – இயக்குனர், எஸ்எஸ்விஎம் நிறுவனங்கள்; கல்வி தொழில்முனைவோர்; பாடகர், சஞ்சய் ஜெயின் (தலைவர், கூகிள் பார் எஜுகேஷன் இந்தியா), சுரேஷ் நாராயணன் (தலைவர் – நிர்வாக இயக்குநர், நெஸ்லே இந்தியா) உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
முக்கிய அமர்வுகள் மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறைகளும் இந்த மாநாட்டில் இடம் பெற உள்ளது. மாணவர் முன்னோடி விருதுகள் மற்றும் உத்வேக குரு விருதுகள் என பல்வேறு விருதுகளும் வழங்கி மாணவர்களை இந்த மாநாடு ஊக்கப்படுத்த உள்ளது. கல்வியாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



