கோவை பெத்தேல் மருத்துவமனையில் எலும்பு, மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி மூலம் மருத்துவம் அளிக்கப்படுகிறது.
கோவை பெத்தேல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் ராஜபாண்டியன், டாக்டர் ஷீலா ராஜபாண்டியன், எலும்பியல் நிபுணர் டாக்டர் ஏ.சாமுவேல் அனந்தராஜ் ஆகியோர் பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:- கோவை பெத்தேல் மருத்துவமனையில் சிறிய ஊசிகள் மூலம் சில வகையான எலும்பு முறிவு, அனைத்து மூட்டு வலி மற்றும் ஆறாத புண்களுக்கான சிகிச்சையில் புதிய நவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேஜர் அறுவை சிகிச்சை, நீண்ட கால படுக்கையில் இருத்தல், குணமாக பல மாதங்கள் ஆகும் என்பன போன்றவற்றுக்கு சிறிய ஊசிகள் சிகிச்சை பலன் தரும். மேலும் இடுப்பு, முதுகுத் தண்டு முறிவுகளுக்கு சிகிச்சை அளிப்பதின் மூலம் முதிய நோயாளிகள் கூட அறுவை சிகிச்சையின்றி அதே நாளில் நின்று நடக்கும் அளவுக்கு வலி குறைகிறது.
முகர்ஜி முறைமூலம் மூட்டு வலி. தோள்பட்டை இறுக்கம், கழுத்து முதுகுவலி, தசை நார் குருத்தெலும்பு காயங்கள், மற்றும் AVN Avascular Necrosis பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கிறது.
குறைந்த அளவு மருந்துகள் – ஊட்டச்சத்து மாத்திரைகள் Ozone Arthrodiastasis மூட்டு இடைவெளியில் ஒசோன் சிகிச்சை, Autohemotherapy (இரத்தத்தை ஒசோனுடன் சிகிச்சை செய்து மீண்டும் செலுத்துதல்) ஆகியவை இணைந்து நோயாளிகளுக்கு பல னுள்ள சிகிச்சையை தருகின்றன.
மேலும் இச்சிகிச்சை முறைகள், நீரிழிவு மற்றும் இரத்தக் குழாய் சிக்கலால் ஏற்படும் ஆழமான, ஆறாத புண்களுக்கும் புதுமையான தீர்வை வழங்குகிறது. இது நோய் தொற்றைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, குணமடைய வழிவகுக்கிறது.
இந்த சிறிய ஊசி முறைகள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையைத் தவிர்க்க உதவுவதோடு, விரைவில் நடக்கவும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் பெரிதும் உதவு கின்றன. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



