fbpx
Homeபிற செய்திகள்ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் கோவை செல்வம் பங்கேற்பு

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் கோவை செல்வம் பங்கேற்பு

கோவை புலியகுளம் பெரியார் நகரில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா காங்கிரஸ்கட்சி சார்பில் கோவை மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் எம்.எஸ். பார்த்திபன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஐ.என்.டி.யு.சி . தொழிற்சங்க மாநில தலைவர் கோவை செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராஜிவ் காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சௌந்தர் குமார், சர்க்கிள் தலைவர் கணேசன், மண் டல பொறுப்பாளர் மோகன்ராஜ், சிங்கை செல்வராஜ், சேவாதளம் செந்தில், ராஜமாணிக்கம், சிவாஜிராஜன், அமுல்ராஜ், காந்தி பாபு, சம்பத்குமார், ரூபன், ஆறுமுகம் சுப்பிர மணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img