ஈரோடு சட்டக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவிகள் சமீபத்தில் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக பர்கூர் மலைப்பகுதியில் சட்ட உதவி முகாம் ஒன்றை நடத்தினர்.
அவர்கள் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் மற்றும் பிஎஸ்என்எல் தொலைபேசிப் பொது மேலாளர் ஆகியோரை சந்தித்து, மலைப்பகுதியில் தொலைபேசி வசதி ஏற்படுத்த வலியுறுத்தினர்.
இதனால் பர்கூர் மக்களுக்கு தற்போது அரசு வழங்கும் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வுக்கு கல்லூரியின் துணைத் தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் அருண் பாலாஜி, மற்றும் முதல்வர் அக்பர் அலி பெய்க் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.



