சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனியில் முன்னாள் ராணுவ வீரர்கள் தேசிய ஒருங்கிணைப்பு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பாக முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா தென் மண்டல தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் கே.சீனிவாசன், மாவட்டத் தலைவர் எஸ்.மணி மற்றும் மாவட்ட பொருளாளர் ஐயப்பன் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட தொழில் அதிபர் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் பி.பாண்டிய ராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவத்தினர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்கள் பத்து நபர்களுக்கு பணம் முடிப்பும் கேடயமும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவத்தினர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.



