fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி கொடியேற்றினார் தூய்மை பணியாளர்களுக்கு சுதந்திரன தின விருந்து

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி கொடியேற்றினார் தூய்மை பணியாளர்களுக்கு சுதந்திரன தின விருந்து

79வது சுதந்திர தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் குபானோத் ம்ருகேந்தர் லால் தலைமை வகித்தார். துணை ஆணை யர் சரவணக்குமார் வரவேற்றார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விழாவில் 25வருடம் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள். தனியார் ஒப்பந்த பணியாளர்கள், பசுமையை உருவாக்கும் வகையில் மரம் நடுதல் செய்தவர்கள், மாநகராட்சி வளர்ச்சிக்கு தனியார் பங்களிப்புடன் உதவியவர்கள் என 65 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பாராட்டு சான் றிதழ் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் . வக்கீல் பாலகுருசுவாமி. அன்னலட்சுமி கோட்டு ராஜா நிர்மல் ராஜ், கலைச்செல்விதிலகராஜ். உதவிசெயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் கள் பாலமுருகன், கல் யாணசுந்தரம், வெங்கட்ராமன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறி யாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, ராஜசேகர் ஸ்டாலின் பாக்கிய நாதன், நெடுமாறன், இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, அமல்ராஜ், லெனின், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார். ரெங்கசாமி. ராமகிருஷ்ணன், சரவணக் குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி. நாகேஸ் வரி, ஜெயசீலி, மரியகீதா, உள்பட பலர் கலந்து கொண்டனர் செயற்பொ றியாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார். பின்னர் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இதுபோல் நான்கு மண்டல அலுவலகங்களிலும் நடந்த விழாவில் மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி திலகராஜ். அன்னலட்சுமி கோட்டு ராஜா. ஆகியோர் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img