ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஸ்பிக் நிறு வனத்தின் முழுநேர இயக்குநரும் பள்ளித் தலைவருமான பாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுச் சிறப்புரை ஆற்றினார்.
மாணவர்கள் ஒன்றிணைந்து இசைத்து பாடிய நாட்டுப்பற்று மிக்க பாடலும், தமிழ், ஆங்கில உரையும், நயமுடன் கூறிய கவிதையும், சின்னஞ்சிட்டுகள் தேசத்தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்ததும் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
மேலும் விழாவில் பள்ளிச் செயலர் பிரேம் சுந்தர், பள்ளி தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



