வேலூரில் செயல்பட்டு வரும் நறுவீ மருத்துவமனையில், கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக உலகத் தரத்திலான நவீன மருத்துவ உபகரணங்களுடன் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு நேற்று (15ம் தேதி) தொடங்கப்பட்டது.
இதை நறுவீ மருத்துவ மனை தலைவர் முனைவர் சம்பத்திறந்து வைத்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய மற் றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘எல் கியூப்’ மருத்துவக் குழுவுடன் நறுவீ மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், உலகின் பல நாடுகளிலும் இருந்து நோயாளிகள் வருகை தரும் நறுவீ மருத்துவமனை, இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளில் சிறப்பாக சேவை செய்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசு களின் அனுமதியுடன் நடைபெறும் இந்த சிகிச்சைகள், உயர்தர மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிபுணர் குழுவின் பங்களிப்பால் நாட்டில் முன்னணியில் உள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் படி, ‘எல் கியூப்’ மருத்துவக் குழுவின் தலைவர்கள் டாக்டர் ஜாய் வர்கீஸ், டாக்டர் விவேக் விஜ் ஆகியோர் தலைமையிலான நிபுணர் குழு, நறுவீ மருத்துவமனையில் முகாமிட்டு கல்லீரல் தொடர்பான சிகிச்சைகளையும் மாற்று அறுவை சிகிச்சை களையும் வழங்க உள்ள னர். ஒரே நாளில் நான்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த சாதனையும் இக்குழுவுக்குள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கான புரிந்துணர்வு ஆவணத்தில் முனைவர் சம்பத் மற்றும் டாக்டர் ஜாய் வர்கீஸ் கையொப்பமிட்டனர். இதன் மூலம், கல்லீரல் சிகிச் சைக்காக நோயாளிகள் பிற நகரங்களுக்கு செல்லும் அவசியம் குறைந்து, வேலூ ரிலேயே உலகத் தரத்திலான சிகிச்சை பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
தொடக்க நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் ராமன், பொது மேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



