இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி, என்ற கையேட்டினை வெளியிட்டுள்ளது.
கரும்பு இனப்பெருக்கு நிறுவனமும் கோயம்புத்தூர் அகில இந்திய வானொலியும் இணைந்து, கடந்த வருடம் நடத்திய, வானொலி வேளாண்மைப் பள்ளியானது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். அவ்வேளாண்மைப் பள்ளியில் இடம் பெற்ற பாடங்களின் அச்சு வடிவே இக்கையேடாகும்.
13 அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில் கரும்பு இரகங்கள், தரமான கரும்பு விதை உற்பத்தி, நீர் மற்றும் உர மேலாண்மை, இயந்திரங்கள், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
இது தவிர, திசு வளர்ப்பு நாற்று உற்பத்தி, கரும்பிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கரும்பு விவசாயிகளுக்கான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. நூலில் உள்ள வண்ணப் படங்களும், பெட்டிச் செய்திகளும் வாசகர்களின் ஈர்ப்பை அதி கரித்து தகவல்களை சிறப்பாக விளக்க உதவுகின்றன.
கரும்பு விவசாய ஆராய்ச்சியில் பல்லாண்டு அனுபவம் பெற்ற விஞ்ஞானிகளின் தொழில்நுட்பக் கட்டுரைகள் அடங்கிய இக்கையேடு, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள் ளதாக இருக்கும். கூடுதல் விவரங்களை லீttஜீs://suரீணீக்ஷீநீணீஸீமீ100.தீறீஷீரீsஜீஷீt.நீஷீனீ/ என்ற முகவரியில் பெறலாம்.



