fbpx
Homeபிற செய்திகள்வேளாண்மைப் பல்கலை - வி.எஸ்.டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேளாண்மைப் பல்கலை – வி.எஸ்.டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவளரும் துணை வேந்தருமான (பொறுப்பு) டாக்டர் ஆர்.தமிழ் வேந்தன், வி. எஸ்.டி. டில்லர்ஸ் டிராக்டர்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஆண்டனி செருகாரா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- தமிழ்நாட்டில் விவசாய துறையில் சிறு பண்ணைகளிலும், வயல்களிலும் பணிகளை இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு முழுவதும் சிறு பண்ணைகள் / வயல்களில் விவசாயம் தொடர்பான பணிகளை இயந்திரமயமாக்கல் குறித்த அதிக விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் பயிற்சியளிப்பதற்கும், சிறிய விவசாய இயந்திரங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான வி.எஸ்.டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது.

இந்த உத்திசார்ந்த முக்கிய ஒத்துழைப்பு திட்ட மானது, உள்நாட்டளவிலும் மற்றும் உலக அளவிலும் நிலையான உணவு உற்பத்திக்கு ஆதரவளிப் பதற்காக தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் கல்விசார்ந்த மேம்பட்ட தீர்வுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கையெழுத்திடப்பட்டிருக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பல முக்கிய அம்சங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன பண்ணை தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சிறு பண்ணை இயந்திரமயமாக்கல் குறித்த விழிப்புணர்வை பரப்புதல், உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப வி.எஸ்.டி-யின் பண்ணை இயந்திரங்களை பரிசோதித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல், தொழில்நுட்பப் பரிணாம வளர்ச்சிகள் குறித்த ஆதரவளித்தல், பண்ணை எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு மாணவர்களுக்கு இயந்திரமயமாக்கல் துறையில் மாணவர்களுக்கு செயல்திட்ட வாய்ப்புகளை வழங்குதல், மற்றும் களப்பணியாற்றுவதற்காக மாணவர்களுக்கு வி.எஸ்.டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ளகப் பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின்கீழ் சிறப்பு கவனம் பெறும் நடவடிக்கைகளாக இருக்கும்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img