fbpx
Homeபிற செய்திகள்இந்தியன் வங்கியின் 119 வது நிறுவன நாள் கோவையில் கோலாகல கொண்டாட்டம் களப்பொது மேலாளர் பி.சுதாராணி...

இந்தியன் வங்கியின் 119 வது நிறுவன நாள் கோவையில் கோலாகல கொண்டாட்டம் களப்பொது மேலாளர் பி.சுதாராணி துவக்கி வைத்தார்

இந்தியன் வங்கியின் 119வது நிறுவன நாள் விழா, வங்கியின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் கொண்டாடப்பட்டது. கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்த இந்த விழாவை வங்கியின் கோவை களப் பொது மேலாளர் பி.சுதாராணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

முதன்மை பொது மேலாளர் செல்வி வி.என்.மாயா, மண்டல மேலாளர் வெங்கட ரமண ராவ், துணை மண்டல மேலாளர் கே.எம்.அமீருல்லா ஜவஹிர் மற்றும் ஓய்வுபெற்ற நிர்வாகிகள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
விழாவில் களப் பொது மேலாளர் பி.சுதாராணி பேசுகையில், ரூ.13.45 லட்சம் கோடி வர்த்தகம் செய்து வங்கி புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் வங்கியின் செயலிகளையும் எண்ம தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வாடிக்கையாளர்களின் பங்களிப்போடு அவர்களின் கருத்துகளைப்பெற்று இந்தியன் வங்கியை நாட்டின் 7வது பெரிய பொதுத் துறை வங்கியாக உயர்த்தி யதற்கு நன்றியையும் களப்பொது மேலாளர் பி.சுதாராணி தெரிவித்துக் கொண்டார். விழாவில் மண்டல மேலாளர் வெங்கட ரமண ராவ் பேசுகையில், வங்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வாடிக்கை யாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இறுதியில், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் துணை மண்டல மேலாளர் கே.எம்.அமீருல்லா ஜவ ஹிர் நன்றி தெரிவித்தார்.

மேலும், வங்கியின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் உதவிகள் செய்வது, பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் எம்.எஸ்.எம்.இ. முகாம்களும் நடத்தப் பட்டன. இதில் அனைத்து இந்தியன் வங்கி ஊழியர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img