fbpx
Homeபிற செய்திகள்திமுக இளைஞர் அணியினர் மக்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்க வேண்டும்: அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு

திமுக இளைஞர் அணியினர் மக்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்க வேண்டும்: அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு

திமுக இளைஞரணியினர் வீடு வீடாக சென்று மக்கள் நல திட்டங்கள் மற்றும் அரசின் சாதனைகளை விளக்க வேண்டும். அதே சமயம் மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவற்றை தீர்க்கவும் முயல வேண்டும் என்று வீட்டு வசதி அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.
திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி கூட்டம் அணி அமைப்பாளர் ஜே திருவாசகம் தலைமையில்
ஈரோடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. அது எந்த விதத்திலும் திமுகவை வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற் றிக் கொள்ள முடியாது.
நாங்கள் முதல்வரை சந்திக்கும்போதெல்லாம் அவர் அந்தந்த பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை எடுத்துக் கூறவே விரும்புகிறார். அதனை தீர்ப்பதற்கு உறுதி காட்டுகிறார். அதனால் செல்லும் இடமெல்லாம் அவருக்கு வரவேற்பு உள்ளது.

இளைஞர் அணியினர் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அரசின் சாதனைகளை கூறும்போது தேர்த லுக்காக கூறுகிறார்கள் என்று மக்கள் நினைப்பார்கள். எனவே முன்கூட்டியே மக்களிடம் சென்று அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
திமுக வில் 25 அணிகள் உள்ளன. அவற்றில் வலுவான அணி இளைஞர் அணி. முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி 1.15 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கி உள்ளார். மேலும் விடுபட்ட பெண்களுக்கு வழங்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.

அதில் நிச்சயமாக 40 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து விடுபட்டவர்களுக்கும் அத் தொகை கிடைக்கும் என்பதை இளை ஞர் அணியினர் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கட்சி நிர்வாகிகள் மா.சுப்பிரமணி யம், செல்லப்பொன்னி மனோகரன், பி.கே.பழனிச்சாமி.
இளைய கோபால் மற்றும் பலர் உரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img