சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம், கடலூர் மாவட்ட இந்திய குழந்தை நல மருத்துவ குழுமம், இன்னர் வீல் சங்கம் இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை தலைவர் பா.ராஜேந்திரன், வீனஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனர் எஸ்.குமார் ஆகியோர் கலந்துகொண்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்து உரையாற்றினர்.
ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கனகவேல், இன்னர் வீல் தலைவி கோமதி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் டி.நரேந்திரன் வரவேற்றார். கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவத் துறை தலைவர் எஸ்.ரமேஷ், இந்திய குழந்தைகள் நலச் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.சிவப்பிரகாசம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடத்தப் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது.
தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்துகளின் அவசியம் குறித்த நூலை பள்ளித் தாளாளர் ஏ.ரூபி யாள்ராணி வெளியிட, பள்ளியின் நிறுவனர் எஸ்.குமார் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை ஆசிரியை எஸ்.சுபஸ்ரீ தொகுத்து வழங்கினார்.



